17 October 2018

மரித்தாரே என் ஆண்டவர்


Horsley

110                                                     C.M.

1.         மரித்தாரே என் ஆண்டவர்,
                        சிலுவையில் தானே;
            மரித்தாரே என் ரட்சகர்,
                        ஆ, எனக்காகவே.

2.         சிலுவைமீது ஜீவனை
                        என் மீட்பர் விட்டாரே;
            எனக்குத்தான் இப்பலியைச்
                        செலுத்தி மாண்டாரே.

3.         நான் எண்ணி எண்ணி வருகில்,
                        என் நேசம் ஊக்கமாய்
            கொழுந்து விட்டென் நெஞ்சத்தில்
                        எரியும் பக்தியாய்.

4.         என் மீட்பர் இயேசு கிறிஸ்து தாம்
                        இவ்வருள் செய்தாரே;
            நான் என்ன பதில் செய்யலாம்?
                        ஈடொன்றுமில்லையே.

5.         என் தேகம், செல்வம், சுகமும்,
                        என் ஜீவன் யாவுமே
            சுகந்த பலியாகவும்
                        படைப்பேன் இயேசுவே!

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...