12 October 2018

சாந்த இயேசு சுவாமீ


Jesus gentlest Saviour
Caswall, North Coates

191                                                                         6, 5, 6, 5

1.         சாந்த இயேசு சுவாமீ,
                        வந்திந்நேரமும்,
            எங்கள் நெஞ்சை உந்தன்
                        ஈவால் நிரப்பும்.

2.         வானம், பூமி, ஆழி
                        உந்தன் மாட்சிமை
            ராஜரீகத்தையும்
                        கொள்ள ஏலாதே.

3.         ஆனால், பாலர்போன்ற
                        ஏழை நெஞ்சத்தார்
            மாட்சி பெற்ற உம்மை
                        ஏற்கப் பெறுவார்.

4.         விண்ணின் ஆசீர்வாதம்
                        மண்ணில் தாசர்க்கே
            ஈயும் உம்மை நாங்கள்
                        போற்றல் எவ்வாறே?

5.         அன்பு, தெய்வ பயம்,
                        நல் வரங்களும்,
            சாமட்டும் நிலைக்க
                        ஈயும் அருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...