சிலுவை சுமந்தோனாக


Jesus I my cross have taken
SS 319;  597

311                                                                 8, 7, 8, 7 D.

1.         சிலுவை சுமந்தோனாக,
                        இயேசு உம்மைப் பற்றுவேன்;
            ஏழைப் பரதேசியாக
                        மோட்ச வீடு நாடுவேன்;
            உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,
                        ஞானம், லோகம், அனைத்தும்
            அற்பக் குப்பை என்று எண்ணி,
                        வெறுப்பேனே முற்றிலும்.

2.         உமக்காகப் பாடுபட்டோன்
                        நஷ்டப்படமாட்டானே;
            உமக்கென்று ஜீவன் விட்டோன்
                        சாகா ஜீவன் பெற்றானே;
            உம்மை வெல்ல மீட்பர் என்று
                        சொல்லி, நித்தம் பற்றுவேன்;
            கஸ்திப்பட்டும் சாவை வென்று,
                        வாடா கிரீடம் பெறுவேன்.

3.         துஷ்டர் என்னைப் பகைத்தாலும்,
                        நீரே தஞ்சம் ஆகுவீர்;
            கஸ்தி என்ன நேரிட்டாலும்,
                        இனி மேன்மை தருவீர்;
            உமதன்பு என்னைத் தேற்றத்,
                        துக்கம், பயமில்லையே;
            நாதா, உம் பிரசன்னம் நீங்க,
                        இன்பமெல்லாம் துன்பமே.

4.         நெஞ்சமே, உன் மேன்மை எண்ணு,
                        வரும் செல்வம் நோக்கிப்பார்;
            மோட்ச நன்மை தேடிக்கொள்ளு,
                        உன் சுதந்தரத்தைக் கா;
            கொஞ்ச வேளைக்குள் பறந்து
                        இயேசு அண்டை சேருவாய்;
            தெய்வ தூதரோடு நின்று
                        என்றென்றைக்கும் துதிப்பாய்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு