05 October 2018

மரித்த கிறிஸ்தின் ஆவியும்


78. Williams: Rockingham                           (380)               L.M.

"Die Seele Christ hell'ge mich"

1.         மரித்த கிறிஸ்தின் ஆவியும்
            வதைக்கப்பட்ட தேகமும்
            என் தேகம், ஆவி யாவையும்
            என்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

2.         என் மீட்பரின் ஐங்காயத்தில்
            வடிந்த தூய ரத்தத்தில்
            நான் மூழ்க, பாவம் யாவுமே
            நிவிர்த்தியாகி விட்டதே.

3.         அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,
            ஒதுக்கை உம்மிடத்திலே
            விரும்பித் தேடும் என்னையும்
            மறைத்துப் பாது காத்திடும்.

4.         என் ஆவி போகும் நேரத்தில்
            அதை நீர் தேற்றி, மோட்சத்தில்
            என்றைக்கும் உம்மைப்போற்றவே
            உம்மண்டை சேரும், கர்த்தரே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...