17 October 2018

முடிந்ததே இந்நாளும்


The day is past and over

St.       Anatolius

39                                        7, 6, 7, 6, 8, 8

1.         முடிந்ததே இந்நாளும்;
                        உம்மையே துதிப்போம்,
            எத்தோஷமின்றி ராவும்,
                        சென்றிடக் கெஞ்சுவோம்;
            நாதா உம்மோடு வைத்திடும்,
            நீர் ராவில் எம்மைக் காத்திடும்.

2.         முடிந்ததே உற்சாகம்;
                        உள்ளம் உயர்த்துவோம்,
            எப்பாவம் இன்றி ராவும்
                        சென்றிடக் கெஞ்சுவோம்!
            ராவை ஒளியாய் மாற்றிடும்,
            நீர் ராவில் உம்மைக் காத்திடும்

3.         முடிந்ததே எம் வேலை
                        களிப்பாய்ப் பாடுவோம்
            எச்சேதமின்றி ராவும்
                        சென்றிடக் கெஞ்சுவோம்;
            நாதா உம்மோடு வைத்திடும்;
            நீர் ராவில் எம்மைக் காத்திடும்.

4.         காப்பீர் எம் ஆத்துமாவை
                        எம் பாதை நேரிடும்
            எம் மோசம் சேதம் யாவும்
                        உமக்குத் தோன்றிடும்;
            மாந்தரின் நேசா, கேட்டிடும்
            எத்தீங்குமின்றிக் காத்திடும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...