மின்னும் வெள்ளங்கி பூண்டு
Ten thousand times ten thousand
Alford
406 7,
6, 8, 6 D.
1. மின்னும்
வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற
கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில்
பல்
கோடியாய்ச் செல்வார்,
வெம்பாவம் சாவை இவர்
வென்றார்
- போர் ஓய்ந்ததே
செம்பொன்னாம் வாசல் திறவும்!
செல்வார்
இவர் உள்ளே.
2. முழங்கும் அல்லேலூயா
மண்
விண்ணை நிரப்பும்;
விளங்கும் கோடி வீணைகள்
விஜயம்
சாற்றிடும்,
சராசரங்கள் யாவும்
சுகிக்கும்
நாள் இதே;
இராவின் துன்பம் நோவுக்கு
ஈடாம்
பேரின்பமே
3. அன்பான நண்பர் கூடி
ஆனந்தம்
அடைவார்;
மாண்பான நேசம் நீங்காதே
ஒன்றாக
வாழுவார்;
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்;
மண்ணில் பிரிந்த உயிர்கள்
மீளவும்
சேர்ந்திடும்
4. சிறந்த உந்தன் மீட்பை
சமீபமாக்குமே;
தெரிந்து கொள்ளப்பட்டவர்
தொகை
நிரப்புமே;
உரைத்த உந்தன் காட்சி
உம்பரில்
காட்டுவீர்;
இறைவா, ஏங்கும் தாசர்க்கு
இறங்கி
வருவீர்.
Comments
Post a Comment