தாழ்விலிருந்து கூப்பிடும்


Aus tiefer Not schref ick su dir
Bavarian 21; 76

289                                                                 8, 7, 8, 7, 8, 8, 7

1.         தாழ்விலிருந்து கூப்பிடும்
                        என் சத்தங் கேட்டன்பாக,
            என் அழுகை அனைத்துக்கும்
                        செவி கொடுப்பீராக;
            கர்த்தாவே, பாவக் குற்றத்தை
            நீர் மன்னியாமல், நீதியைப்
                        பார்த்தால், யார் நிற்கக்கூடும்?

2.         மன்னிப்பை எவனானிலும்
                        தன் புண்ணியங்களாலே
            அடையான்; உம்மை யாவரும்
                        தாழ்வான மனத்தாலே
            பணிந்து பயப்படவே,
            மனத் தரிதிரருக்கே
                        மன்னிக்கிறீர், கர்த்தாவே.

3.         நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன்,
                        என் புண்ணியம் அபத்தம்;
            தெய்வன்பையே நான் நம்புவேன்;
                        அதற்கு வாக்குத்தத்தம்
            மெய்யான வேதவார்த்தையில்
            உண்டாமே, நான் என்மனத்தில்
                        அதற்குக் காத்திருப்பேன்.

4.         ராச்சாமங் காக்கிறோர்; எப்போ
                        விடியும் என்பதாக
            நிற்பார்களே, என் மனதோ
                        அதிக ஆசையாக
            கர்த்தாவை நோக்கிக் காக்குது;
            ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்கு
                        காத்தேயிரு, ரட்சிப்பார்.

5.         என் பாவம் பெரிதாகிலும்
                        தெய்வன் பதிகமாமே;
            கேடெத்தனை பெருகியும்;
                        மீட்பு அதில் மேலாமே,
            ஆ, இஸ்ரவேலின் பாவங்கள்
            அனைத்தும் நீக்கும் மீட்குதல்
                        கர்த்தாவினாலே ஆகும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு