தனி மாந்தன் தேசத்தாரும்
Once to every man and natle
Hyfridol
235 8,
7, 8, 7, 8
1. தனி மாந்தன்
தேசத்தாரும்,
நீதிப் போரில் சேர்ந்துமே,
நன்மை நாட்ட தீமை ஓய்க்க
ஓர் தருணம் நேருமே;
ஸ்வாமி ஆட்சி, மேசியாவை
ஏற்று அன்றேல் தள்ளியே,
தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து
ஆயுள்காலம் ஓடுமே.
2. சத்திய நெறி மா கடினம்,
பயன் பேரும் அற்றதாம்
சித்தி எய்தாதாயினுமே
நீதியே மேலானதாம்;
நீதி வீரன் நீதி பற்ற,
கோழை நிற்பான் தூரமே;
நீதி பற்றார் யாரும் ஓர்நாள்
நிற்பர் நீதி பற்றியே.
3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கி
கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்;
கோர நோவு நிந்தை சாவு
சிலுவையும் சகிப்போம்;
காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை
புதிதாய் விளங்குமே;
மேலும் முன்னும் ஏறவேண்டும்
சத்திய பாதை செல்வோரே.
4. தீமை கிரீடம் சூடி வாழ்ந்தும்,
சத்தியம் நிலைத்தோங்கிடும்;
வாய்மை வீரன் தூக்குமேடை
தீ வாள்வாய்ப் படுகினும்,
வீரன் அவன், லோகம் ஆள்வான்;
நீதி வாழ்க்கை வெல்லுமே;
சாரும் பக்தனையே நாதர்
காப்பார் காணா நின்றுமே.
Comments
Post a Comment