18 October 2018

இரட்சிப்பு சுத்த தயவால்


148. Dettingen, Yoheleth.                
Erk.                 (400)   8, 7, 8, 7, 8, 8, 7.

"Es ist das Heil uns kommen her"

1.         ரட்சிப்பு சுத்த தயவால்
                        உண்டான தேவதத்தம்;
            அது நாம் செய்த தர்மத்தால்
                        கிடைப்பது அபத்தம்;
            பூலோகத்தின் கடன்களை
            செலுத்தித் தீர்த்த யேசுவை
                        அண்ணாந்து பார்க்க வேண்டும்.

2.         தெய்வீக கற்பனைகளை
                        நாம் கைக்கொள்ளாமல் விட்டு
            துர் ஸ்பாவத்தாலே பாவத்தை
                        எப்போதும் நடப்பித்து
            கர்த்தாவைக் கோபமூட்டினோம்,
            நிர்ப்பந்தத்தைச் சம்பாதித்தோம்,
                        சீர்கேடு பெருகிற்று.

3.         இப்போதோ யேசு க்றிஸ்துவால்
                        நாம் நீதிமான்களாயும்
            தேவாவியின் நற் க்ரியையால்,
                        ஜென்மிக்கப்பட்டோராயும்,
            மெய்த் தொண்டராயும் நடப்போம்
            கர்த்தாவின் அன்பைக் கூறுவோம்
                        எந்நாளும் துதி செய்வோம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...