18 October 2018

தெய்வ கிருபையைத் தேடி


149. Redhead, 143, St. Oswald                  8s, 7s.

"Ringe recht, wenn Gottes Gnade"

1.         தெய்வ கிருபையைத் தேடி,
                        பாவி, மனந் திரும்பு;
            மீட்பர் தரும் ஈவை நாடி
                        தூக்கம் விட்டெழுந்திரு.

2.         வாசலானதோ இடுக்கம்,
                        தாழ்மையாகி உட்படு;
            ஜீவ வழியோ நெருக்கம்,
                        லோக நேசத்தை விடு.

3.         மாம்சம் லோகம், ஆசாபாசம்,
                        பாவம் யாவும் அகற்றி
            யேசுவில் மெய் விசுவாசம்
                        வைத்து உன்னை ஒப்புவி.

4.         கர்த்தர் உன்னைத் தயவாக
                        ஏற்றுக்கொண்ட பிறகு
            ஜெபத்தோடு விழிப்பாக
                        அவரில் நிலைத்திரு.

6.         ஜீவனுள்ள நாள் மட்டாக
                        மோசங்கள் இருப்பினும்
            தேவ கரம் பலமாக
                        உன்னை காத்து நடத்தும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...