18 October 2018

இயேசு கிறிஸ்துவே


147. Hampstead, Morpeth                 
Fatherland,     (399)  5, 5, 8, 8, 5, 5.

"wer ist wohl wie du"

1.         யேசு கிறிஸ்துவே,
                        பூதலத்திலே
            கெட்டுப்போனவர்க்கு ஞான
            ஒளியும் உயிருமான
                        ரட்சகர் நீரே
                        இயேசு க்றிஸ்துவே.

2.         என்னை மீட்க நீர்
                        ஜீவனை விட்டீர்;
            குற்றம் யாவையும் தொலைக்க;
            ஆக்கினை எல்லாம் விலக்க
                        எனக்காக நீர்
                        ஜீவனை விட்டீர்.

3.         ஆஸ்தி ஜீவனும்
                        மற்ற யாவையும்
            தேவரீருக்காய் வெறுக்க
            ஆசை என்னிடத்திருக்க
                        என்னை முழுதும்
                        ரட்சித்தருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...