நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்


Als Jesus Christus in der Nacht
Bavarian 84

195                                                                         8, 7, 8, 7

1.         நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
                        மரிக்க வந்து, சாவில்
            கிடந்த நம்மைத் தயவாய்
                        நினைக்கும் அன்றிராவில்;

2.         அன்புள்ள கையில் அப்பத்தை
                        எடுத்துஸ்தோத்தரித்து,
            அதற்குப் பிறகே அதை
                        சீஷர்களுக்குப் பிட்டு;

3.         "வாங்கிப் புஷியுங்கள், இது
                        உங்களுக்காய்ப் படைத்து
            கொடுக்கப்பட்ட எனது
                        சரீரம்" என்றுரைத்து;

4.         பிற்பாடு பாத்திரத்தையும்
                        எடுத்துத் தந்தன்பாக
            உரைத்தது: "அனைவரும்
                        இதில் குடிப்பீராக;

5.         இதாக்கினைக்குள்ளாக்கிய
                        அனைவர் ரட்சிப்புக்கும்
            சிந்துண்டுபோகும் என்னுட
                        இரத்தமாயிருக்கும்;

6.         புது உடன்படிக்கைக்கு,
                        இதோ, என் சொந்த ரத்தம்
            இறைக்கப்பட்டு போகுது,
                        வேறே பலி அபத்தம்;

7.         இதுங்கள் அக்கிரமங்களை
                        குலைக்கிற ஏற்பாடே;
            இதற்குச் சேர்ந்தென் பட்சத்தை
                        நினையுங்கள்" என்றாரே.

8.         ஆ, ஸ்வாமீ, உமக்கென்றைக்கும்
                        துதி உண்டாவதாக;
            இப்பந்தியால் அடியேனும்
                        பிழைத்துக்கொள்வேனாக.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு