15 October 2018

நல்ல ஜெயம் போர் செய்தின்றே



Triumph triumph es kommt mit Pracht
Sp S 15

129                                                                 L.M. with refrain

1.         நல்ல ஜெயம், போர் செய்தின்றே
            கெலிப்பாய் ராஜா வாராரே;
            அவரைச் சேர்ந்தோர் யாவரும்
            இந்த ஜெயத்தைப் பாடவும்;

                        நல்ல ஜெயம்! நல்ல ஜெயம்!
                        முடிவில்லாப் பூரிப்புமாய்!
                                    அல்லேலூயா!

2.         மீட்பர் அடைந்த வெற்றிக்கு
            எச்சிஷ்டியும் களிக்குது;
            சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்
            சாபம் அத்தால் நிவர்த்தியாம்.

3.         கர்த்தர் மரிக்கும் நாளிலே
            இருண்ட சூரியன் இன்றே
            அவர் உயிர்த்த வெற்றிக்கு
            பிரகாசமாய் விளங்குது.

4.         மா சாந்த ஆட்டிக்குட்டியாய்
            இருந்தோர் வல்ல சிங்கமாய்
            வந்தார், பகைஞரினது
            பத்திரக் காவல் விருதா.

5.         பாவ விஷத்தின் தோஷமும்
            அத்தால் இருந்த தீமையும்
            ரட்சகராலே நீங்கிற்று;
            மகிமை தேடப்பட்டது.

6.         உத்தவாதமாயிற்று,
            சபிக்கப்பட்ட ஆவிக்கு
            நம்மில் பலமில்லாதேபோம்,
            சாவுக்கினி பயந்திரோம்.

7.         மேட்டிமையான சாத்தானே
            தள்ளுண்டு போய் விழுந்ததால்,
            அதின் அரண்கள் யாவுக்கும்
            நிர்மூலமாகுதல் வரும்.

8.         சீஷரின் ஆத்துமங்களை
            நீர் தேற்றி, சமாதானத்தைத்
            தந்ததுபோலே, இயேசுவே,
            நீர் எங்களுக்கும் ஈவீரே.

9.         நாங்கள் உடந்தையாய் உம்மால்
            ஜெயித்து, மோட்ச வாசலால்
            உட்பிரவேசித் தென்றைக்கும்
            உம்முட அன்பைப் பாடவும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...