12 October 2018

மாசில்லாமல் தூய்யதான


104. Sleepers, Wake, awake - Hermhut            Irregular

"Heiligster Jeus, Heil' gungs"

1.         மாசில்லாமல் தூய்யதான
            பளிங்கிலேயும் தெளிவான
                        சுத்தாங்க ஊற்றே, யேசுவே
            கேரூபீன்கள் துய்ய சீரின்
            ப்ரகாசம் யாவும் தேவரீரின்
            முன்பாக மங்கிப் போகுமே;
                        என் பாவத்தின் இருள்
                        மறைய நீர் அருள்
                        கடாட்சியும்,
            ஆ, இயேசுவே, நான் உமக்கே
            ஒப்பாய்ச் சுத்தாங்கமாகவும்.

2.         மனசார, முற்றுமாக
            பிதாவின் சித்தம் ஆவதாக,
                        என்றீர், அமர்ந்த இயேசுவே;
            என் மனமும் தேவசித்தம்
            என் நன்மை ஆகுமென்று நித்தம்
            கீழ்ப்பட்டுத் தாழ்ந்து உம்மையே
                        பின்பற்ற தேவரீர்
                        சகாயம் பண்ணுவீர்,
                        என் நோவிலும்,
            என் யேசுவே, நான் உமக்கே
            ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.

3.         ராப்பகல் உறக்கமற்று,
            நல் மேய்ப்பராய்ப் ப்ரயாசப்பட்டு,
                        நன்றாய் விழித்தீர், யேசுவே,
            நித்தம்; நித்தம் நீர் போதித்தீர்,
            ஜெபத்தில் ராவிலும் தரித்தீர்,
            மங்கா வெளிச்சக் கண்ணனே;
                        விழித்துக் கெஞ்சவே
                        நான் உம்மிடத்திலே
                        படிக்கட்டும்,
            ஆ யேசுவே, நான் உமக்கே
            ஒப்பாய் விழித்திருக்கவும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...