பிரியமான இயேசுவே


Mein Herzens-Jesus meine Lust
Bavarian 117

266                         8, 7, 8, 7, 8, 8, 7

(1-ஆம் பாகம்)

1.         பிரியமான இயேசுவே,
                        என் நெஞ்சைத் தயவாக
            நீர் பூரிப்பாக்கி, என்னிலே
                        மிகுந்த நிறைவாக
            தெய்வீக அன்பை ஊற்றியே,
            பேரருள் தந்த உம்மையே
                        நான் துதிசெய்வேனாக.

2.         என் நெஞ்சில் உம்மால் பற்றின
                        அன்பென்னும் தீ எரியும்;
            என் மனதும்மால் உத்தம
                        மகிழ்ச்சியை அறியும்;
            நான் உம்மை நோக்கும்போதெல்லாம்,
            என் துக்கம் உம்மிலே உண்டாம்
                        அருளினால் தெளியும்.

3.         நீர் என் வெளிச்சம்; உம்மால்
                        திறந்த முகமாக நான்
            பிதாவின் இன்ப நெஞ்சைத்தான்
                        என் ஆறுதலுக்காக
            கண்ணோக்கும்போது, தயவாய்
            நீர் என்னை நீங்கா ஜோதியாய்
                        பிரகாசிப்பிப்பீராக.

4.         நீர் மோட்சத்துக்குப் போம் வழி;
                        உனக்குள்ளான யாரும்
            தப்பிப் போகார்; ஆ, இந்நெறி
                        விலகினோர் எல்லாரும்
            கெட்டழிந்து போவார்களே;
            வழியாம் ஸ்வாமீ, உம்மிலே
                        நிலைக்க என்னைக் காரும்

5.         நீர் சத்தியம்; நான் உம்மையே
                        தெரிந்துகொண்டிருப்பேன்;
            மாறாத மெய்ப் பொருள் நீரே,
                        வீண் மாய்கையை வெறுப்பேன்;
            உம்மாலே பாக்கியம் வரும்;
            மெய்யே, என் நெஞ்சை என்றைக்கும்
                        நான் உமக்கே படைப்பேன்.

6.         நீர் ஜீவன்; என்னை நீர் நீரே
                        பலத்தால் இடைகட்டும்;
            திடன் இல்லா அந்நேரமே
                        என் நெஞ்சில் ஊக்கம் தாரும்,
            தெய்வீக ஜீவன் என்னிலே
            மென்மேலும் வளர்ந்தோங்கவே
                        நல்லாவியாலே காரும்.

(2-ஆம் பாகம்)
1.       நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில்
                        உம்மால் என் பசி ஆறும்;
            நான் போம் வனாந்தரங்களில்
                        என் உள்ளம் உம்மை நாடும்;
            பிதாவின் ஈவாம் மன்னாவே,
            நீர் என்னைப் பாவ இச்சைக்கே
                        விலக்கிக் காத்துக்கொள்ளும்.

2.         நீர் ஜீவ ஊற்று; உம்மாலே
                        என் ஆத்மத் தாகம் தீரும்;
            நீர் தரும் ஈவு நித்தமே
                        சுரக்கும் தண்ணீராகும்;
            நீரூற்றாய் என்னில் ஊறுமேன்,
            நிறைவாய் நித்தம் தாருமேன்
                        ஆரோக்கியமும் சீரும்.

3.         நீர் என்னை ஜோடிக்கும் உடை,
                        நீர் என் அலங்கரிப்பு;
            நான் உம்முடைய நீதியை
                        அணிவதென் விருப்பு;
            பூலோகத்தின் சிங்காரமாம்
            விநோத சம்பிரமம் எல்லாம்
                        என் ஆவிக்கு வெறுப்பு.

4.         நீர் நான் சுகித்து தங்கிடும்
                        அரண்மனையும் வீடும்;
            புசல் அடித்தும் விருதா,
                        பேய் வீணாய் என்னைச் சீறும்;
            நான் உம்மில் நிற்பேன், ஆகையால்
            கெடேன்; பொல்லார் எழும்பி
                        நீர் என் வழக்கைத் தீரும்.

5.         என் மேய்ப்பராய் இருக்கிறீர்,
                        என் மேய்ச்சலும் நீர்தாமே;
            காணாமல்போன என்னை நீர்
                        அன்பாக மீட்போராமே;
            இவ்வேழை ஆட்டை என்றைக்கும்
            நீர் விலக விடாதேயும்
                        நான் உம்முடையோனாமே.

6.         நீரே நான் என்றும் வாஞ்சிக்கும்
                        மா நேசமுள்ள நாதர்;
            நீரே என் ஆசாரியரும்
                        பலியுமான கர்த்தர்;
            நீர் என்னை ஆளும் ராஜாவும்
            உம்மோடே எந்தப் போரிலும்
                        ஜெயிப்பேன், மா சமர்த்தர்.

(3-ஆம் பாகம்)

1.       நீர் உத்தம சிநேகிதர்,
                        என் நெஞ்சும்மேலே சாயும்;
            நீர் உத்தம சகோதரர்,
                        நீர் என்னைப் பார்க்கும் தாயும்;
            நீர் நோயில் பரிகாரியே,
            உம்மாலே ஆறிப்போகுமே
                        என் காயமும் விடாயும்.

2.         படையில் நீர் சேனாபதி,
                        வில் கேடகம் சீராவும்;
            கரும் கடலில் நீர் வழி
                        காண்பிக்கும் சமுக்காவும்;
            எழும்பும் கொந்தளிப்பிலே
            நீர் என் நங்கூரம், இயேசுவே,
                        நான் ஒதுங்கும் குடாவும்.

3.         நீர் ராவில் என் நட்த்திரம்,
                        இருளில் என் தீவர்த்தி;
            குறைவில் நீர் என் பொக்கிஷம்,
                        தாழ்விலே என் உயர்ச்சி;
            கசப்பிலே என் மதுரம்;
            நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம்
                        பலக்க, நீர் என் சக்தி.

4.         நீர் ஜீவனில் விருட்சமும்,
                        நீர் செல்வங்கள் பொழியும்
            பூங்காவனமும், என்றைக்கும்
                        சுகம் தரும் கனியும்;
            முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே
            என் ஆவிக்கு நீர், இயேசுவே,
                        குளிர்ந்த பூஞ்செடியும்.

5.         நீர் துக்கத்தில் என் ஆறுதல்,
                        நீர் வாழ்வில் என் களிப்பு;
            நீர் வேலையில் என் அலுவல்,
                        பகலில் என் சிந்திப்பு;
            நீர் ராவில் அடைக்கலம்,
            நீர் தூக்கத்தில் என் சொப்பனம்,
                        விழிப்பில் என் குறிப்பு.

6.         ஆ, ஒப்பில்லாதஅழகே!
                        நான் எத்தனை சொன்னாலும்
            என் நாவினாலே கூடாதே;
                        நான் என்ன வாஞ்சித்தாலும்
            அதெல்லாம் நீரே, இயேசுவே;
            ஆ, தயவுள்ள நேசரே
                        நீர் என்றும் என்னை ஆளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு