சபை எக்காலும் நிற்குமே
Built on the Rock the Church doth
stand
Kirken den er
171 8,
8, 8, 8, 8, 8, 8
1. சபை எக்காலும்
நிற்குமே
கன்மலை கிறிஸ்துமேல் நின்றும்,
ஆலயம் வீழ்ந்து போயுமே
அர்ச்சனை நிலைக்கும் என்றும்;
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே
துன்புற்ற மாந்தர் ஏங்கியே
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.
2. கைவேலையான கோவிலில்
தங்கிடார் உன்னத ராஜர்;
சபையாம் ஆலயத்தினில்
தங்குவார் உன்னத நாதர்;
வானமும் கொள்ள ஸ்வாமியே
பூமியில் வாழ்ந்தார் நம்மோடே
மானிடர் உள்ளமே வீடாம்.
3. சபையே ஸ்வாமி ஆலயம்
ஜீவனுள் கற்களாம் நாமும்;
மெய் ஞானஸ்நான பாக்கியம்
பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும்,
மா சொற்பப் பேரும் பாதத்தில்
பணிந்து வேண்டல் செய்கையில்
அருளும் தயவும் ஈவார்.
4. தாழ்வான ஸ்தானம் யாதிலும்
ராஜாதி ராஜரைக் காண்போம்
அவர் மா மேலாம் ஈவையும்
ஏற்றியே போற்றியே தாழ்வோம்;
அருள்வார் வாக்கு தயவாம்
அதே நம் ஜீவன் ஆவியும்;
அவர் மா சத்தியம் கேட்போம்.
5. பார் எங்குமே எம்மாந்தரும்
ஆலயம் பக்தியாய் நாட;
உம்மில் விஸ்வாசம் ஊன்றியும்
உம் திரு வார்த்தையைக் கேட்க
உம் அடியார் உம் சீஷரே,
நீரே எம் நாதர் யாவுமே;
அருள்வீர் உந்தனின் சாந்தி.
Comments
Post a Comment