லோகநாதா மண்ணோர் மீள
Lord of glory Who hast bought us
Hyfridol
390 8, 7, 8, 7 D.
1. லோகநாதா,
மண்ணோர் மீள
உந்தன் ரத்தம் சிந்தினீர்;
கெட்டுப்போனோர் என்றும் வாழ
உம்மைப் பலியாக்கினீர்;
நன்றி கெட்ட மாந்தர்க்கென்றும்
தயவாகத் தேவரீர்,
எண்ணிறந்த நன்மை சற்றும்
கைமாறின்றி
ஈகிறீர்.
2. உந்தன் நேசக் காந்தியாலும்
எங்கள் நெஞ்சுருகியே,
அன்பில்லாத தன்மை யாவும்
நீங்கச்செய்யும், இயேசுவே;
அதால் நாங்கள் ஏற்பதிலும்
ஈதல் நன்றென்றுணர்வோம்;
நீரே தந்த ஆஸ்தியிலும்
தான தர்மம் செய்குவோம்.
3. சிறியோர்க்குச் செய்த நன்மை
உமக்கிட்ட தர்மமே
என்றந்நாள் நீர் சொல்லும் வாக்கை
கேட்பதின்ப பாக்கியமே;
சொத்து செல்வம் ஏதும் அற்ற
எளியோரால் தேவரீர்
தான தர்மம் கேட்பதாக
இதினாலே போதித்தீர்.
4. லோக நாதா, மண்ணோர் மீள
உந்தன் ரத்தம் சிந்தினீர்;
கெட்டுப்போனோர் என்றும் வாழ
உம்மைப் பலியாக்கினீர்;
உம்மை அண்டிப் பற்றிக்கொள்ள
நம்பிக்கை விஸ்வாசமும்
மா சிறந்த மேன்மையுள்ள
திவ்விய அன்பும் ஈந்திடும்.
Comments
Post a Comment