மா பெரிதாம் நின் கிருபை


St. Raphael

313                                           8, 7, 8, 7, 4, 7

1.         மா பெரிதாம் நின் கிருபை
                        சாவரை மறவேனே;
            மாதாவின் கர்ப்பத்திருந்தே
                        மா தயவாய் என்னையே
                                    அழைத்தீரே,
            மா தவம் நான் செய்தேனோ?

2.         அந்தகாரத்தால் நிறைந்து
                        சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
            தந்து உம்மைச் சொந்தமாக
                        என்தனை நீர் மீட்டீரே;
                                    நாதா உம்மை
            என்றும் நான் துதிப்பேனே.

3.         நான் நினைத்த பாதை வழி
                        தேன் கசியும் பக்கமே
            செல்ல எத்தனித்தபோது,
                        அல்லவென்று தடுத்தே
                                    ஆட்கொண்டீரே,
            ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.

4.         ஊழியத்தை உண்மையுடன்
                        வாழ்நாளெல்லாம் செய்யவும்;
            நீடும் கிருபை சூடியென்னை
                        வீடு சேரும்வரையும்
                                    பலவீனம்
            தாங்கி தயை செய்வீரே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு