17 October 2018

மா மகிழ்வாம் இந்நாளில்


When Christmas morn is dawning

American Lutheran Hymnal 610

70                                         7, 6, 7, 6, 7, 6

1.            மா மகிழ்வாம் இந்நாளில்
                               செல்வோம் முன்னணைக்கே;
               மா மீட்பரை நாம் காண்போம்
                               விஸ்வாசத்தோடின்றே.
               மா மீட்பரை நாம் காண்போம்
                               விஸ்வாசத்தோடின்றே.

2.             வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
                               விண் லோகம் துறந்தீர்;
               மைந்தா, எப்பாவம் தீங்கில்
                               விழாது ரட்சிப்பீர்.
               மைந்தா, எப்பாவம் தீங்கில்
                               விழாது ரட்சிப்பீர்.

3.             மெய் அன்பர் நண்பர் நீரே,
                               நீரே எம் வாஞ்சையும்;
               மெய் அன்பை எங்கள் பாவம்
                               வாட்டாது காத்திடும்.                           
               மெய் அன்பை எங்கள் பாவம்
                               வாட்டாது காத்திடும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...