இரட்சா பெருமானே பாரும்
175. Pastor, Shepherd. 8s,
7s, 6l.
"Saviour like a shepherd lead us"
1. ரட்சா பெருமானே, பாரும்
புண்ய பாதம் அண்டினோம்;
சுத்தமாக்கி
சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்!
யேசு
நாதா, யேசு நாதா,
உம்தன் சொந்தமாயினோம்.
2. மேய்ப்பன்
போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ
தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
யேசு
நாதா, யேசு நாதா,
மேய்ச்சல் காட்டிப்போஷிப்பீர்.
3. நீதி
பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம்
பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்!
யேசு
நாதா, யேசு நாதா,
ஒருபோதும் கைவிடிர்.
4. ஜீவ
கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு
மோட்ச பேரானந்தம்
தந்து வாழச்செய்குவீர்;
இயேசு
நாதா, இயேசு நாதா,
ஊழி காலம் வாழ்விப்பீர்.
Comments
Post a Comment