25 October 2018

அநேகர் ஆசை கொள்ளும்

ஞாபா:194

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

194. Ewing                                                                 7s, 6s, 8l.

 

                   "Keinen hat Gott verlassen"

 

1.       அநேகர் ஆசை கொள்ளும்

                        பொருளை வாஞ்சியேன்,

            கர்த்தாவின் வார்த்தை சொல்லும்

                        மெய்ப் பொருள் நாடுவேன்;

            என் பொக்கிஷம், என் செல்வம்

                        என் ஆஸ்தி க்றிஸ்துவே,

            என் பாக்கியம், பேரின்பம்

                        எல்லாம் என் மீட்பரே.

 

2.         என் யேசுவை நான் பற்றி

                        தொடர்வேன் ஆவலாய்;

            என் சாபத்தை அகற்றி

                        ரட்சித்தார் நேசமாய்;

            நான் தப்ப எனக்காக

                        தம் ரத்தம் சிந்தினார்;

            எனக்கு ஜீவனாக

                        ஜெயித்தெழும்பினார்.

 

3.         இவ்வண்ணம் என்னை மீட்டு

                        ஆள்கொண்ட யேசுவே,

            நான் உம்மையே புகழ்ந்து

                        துதித்தல் ஞாயமே;

            பூரிப்படைந்தோனாக

                        நான் போற்றத் தேவரீர்

            என் நெஞ்சத்தை அன்பாக

                        எழுப்பக் கடவீர்.

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...