என் களிப்புக்குக் காரணம்


195. St. Stephen, Claremont, 

St. peter.                                        C.M.

"My God, the spring of all my joys"

1.         என் களிப்புக்குக் காரணம்
                        என் நல்ல தேவனே,
            பகலில் நீர் என் மகிமை,
                        ராவில் என் ஜோதியே.

2.         இருளிலே நீர் தோன்றினால்
                        என் மனம் மகிழும்;
            நீர் விடிவெள்ளி, ஆனதால்
                        என்னில் ப்ரகாசியும்.

3.         யேசுவைத் தந்த தயவு
                        என் செல்வமானதால்,
            என் ஆத்துமா சந்தோஷித்து
                        மகிழும் வாழ்வினால்.

4.         நரகத்துக்கும் சாவுக்கும்
                        அஞ்சாமல் இருப்பேன்
            தேவன்பும் விசுவாசமும்
                        கொண்டு நான் வெல்லுவேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே