வா பாவி இளைப்பாற வா


I heard the voice of Jesus say

Vex Dilecit

284                                         D.C.M.

1.       "வா, பாவி, இளைப்பாற வா,
                        என் திவ்விய மார்பிலே
            நீ சாய்ந்து சுகி," என்பதாய்
                        நல் மீட்பர் கூறவே;
            இளைத்துப்போன நீசனாய்
                        வந்தாறித் தேறினேன்;
            என் பாரம் நீங்கி, இயேசுவால்
                        சந்தோஷமாயினேன்.

2.         "வா, பாவி, தாகந்தீர வா,
                        தாராளமாகவே
            நான் ஜீவ தண்ணீர் தருவேன்,"
                        என்றார் என் நாதரே;
            அவ்வாறு ஜீவ ஊற்றிலே,
                        நான் பானம்பண்ணினேன்;
            என் தாகம் தீர்ந்து பலமும்
                        பேர் வாழ்வும் அடைந்தேன்.

3.         "வா, பாவி, இருள் நீங்க வா;
                        நான் லோக ஜோதியே,
            உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்,"
                        என்றார் என் நேசரே;
            மெய்ஞான அருணோதயம்
                        அவ்வாறு நான் கண்டேன்;
            அஜ்ஜோதியில் சந்தோஷமாய்
                        நான் என்றும் ஜீவிப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு