வல்ல இயேசு கிறிஸ்து நாதா


Long in darkness we have waited

St. Andrew

310                                                                             8, 7, 8, 7

1.         வல்ல இயேசு கிறிஸ்து நாதா,
                        நல்ல நேச மீட்பர் நீர்;
            பற்று, பாசம் கட்டு முற்றும்
                        அற்றுப் போகப் பண்ணுவீர்.

2.         அருள் ஜோதி தோன்றிடாமல்,
                        இருள் மூடிக் கிடந்தோம்;
            திக்கில்லாமல் பாவப் பற்றில்
                        சிக்கிக் கொண்டே இருந்தோம்.

3.         பக்தி ஒன்றுமில்லை, பாரும்
                        சக்தியற்றுப் போயினோம்;
            ஜீவ பாதை சென்றிடாமல்
                        பாவப் பாதை நடந்தோம்.

4.         இயேசு நாதரே, இப்போது
                        நேசமாக நிற்கிறீர்;
            “என்னை நம்பு, பாவம் நீக்கி
                        உன்னைக் காப்பேன்” என்கிறீர்.

5.         நம்பி வந்து, பாவ நாசா,
                        உந்தன் பாதம் அண்டினோம்;
            தூய ரத்தம் பாயக் கண்டு,
                        தீய செய்கை வெறுத்தோம்.

6.         பாவச் சேற்றிலே விழாமல்
                        தேவரீரே காத்திடும்;
            வல்ல ஆவியாலே என்றும்
                        வெல்லச் செய்து ரட்சியும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு