வாசல்களை உயர்த்துங்கள்
Macht hoch die Thur
Bavarlan 112
54 8, 8, 8, 8, 8, 8, 6, 6
1. வாசல்களை
உயர்த்துங்கள்,
மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்
ராஜாதி ராஜா வருவார்,
பெரிய தெய்வ மைந்தனார்.
உலகத்தைச் சிருஷ்டித்து
ரட்சித்த தேவரீருக்கு
துதி, தயாபரா,
ஆலோசனைக் கர்த்தா.
2. அவர் மா சாந்தமானவர்,
சகாயர் நீதியுற்றவர்,
ராஜாவின் முடி சுத்தமே,
அவர் செங்கோல் இரக்கமே;
இக்கட்டை நீக்கினார் அன்பாய்
புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய்
துதி, மா கர்த்தரே,
பலத்த மீட்பரே.
3. இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும்
போதெந்த ஊரும் தேசமும்
களிக்கும், எங்கள் இதயம்
அடைவதும் மெய்ப் பாக்கியம்
அவர் சந்தோஷப் பொழுதே.
மகிழ்ச்சியை அளிப்பாரே;
ஆ, தேற்றும் உமக்கே
புகழ்ச்சி, கர்த்தரே.
4. வாசல்களை உயர்த்துங்கள்,
நெஞ்சை அலங்கரியுங்கள்;
பக்தியின் குருத்தோலையும்
மகிழ்ச்சியின் கிளைகளும்
தெளியுங்கள், ராஜா வாறார்,
உங்களையும் இரட்சிப்பார்;
கர்த்தாவுக் கென்றைக்கும்
புகழ்ச்சி துதியும்.
5. என்னண்டை இயேசு, வாருமேன்,
என் வாசலைத் திறக்கிறேன்;
அருள் புரியும் தேவரீர்
என் நெஞ்சில் தங்கக்கடவீர்;
மோட்ச வழியைக் காண்பிக்கும்
நல் ஆவியைத் தந்தருளும்
என்றைக்கும் உமக்கே
புகழ்ச்சி, கர்த்தரே.
(84, 152, 204,
205, 209, 210, 212, 214, 397, 398 பாக்களும் பொருத்தமானவை)
Comments
Post a Comment