கர்த்தாவை நம்புவோரை


Keinen hat Gott verlassen
Bavarian 77.   Ewing

303                                                                 7, 6, 7, 6 D

1.         கர்த்தாவை நம்புவோரை
                        ஓர்க்காலும் கைவிடார்,
            பொல்லாரின் சீறுமாற்றை
                        வீணாக்கிப்போடுவார்;
            சன்மார்க்கரைப் பலத்த
                        கையால் தயாபரர்
            ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
                        அன்பாய்விசாரிப்பார்.

2.         கர்த்தாவின் சித்தத்துக்கு
                        கீழ்ப்பட்டடங்குவேன்;
            அப்போ நான் ஜீவனுக்கு
                        நேரே நடக்கிறேன்;
            லௌகீக வாழ்வின் பாதை
                        வேண்டாம், நான் இயேசுவை
            பின்பற்றி, இங்கே வாதை
                        சகித்தால், மாநன்மை.

3.         என்மேலே பாரமாக
                        வரும் இக்கட்டிலே
            பராபரன் அன்பாக
                        என்னோடிருப்பாரே;
            பொறுக்கிற வரத்தை
                        அவரிடம் கேட்பேன்,
            அவ்விதமாய் இக்கட்டை
                        சகித்து வெல்லுவேன்.

4.         கசப்பும் கர்த்தராலே
                        வரும், நான் பின்வாங்கேன்;
            ஜெபத்தில் ஆசையோடே
                        விண்ணப்பம் பண்ணுவேன்;
            அப்போது தயவாக
                        காப்பாரே, கைவிடார்;
            இக்கட்டு பெரிதாக
                        போம்போது தேற்றுவார்.

5.         அநேகர் ஆசைகொள்ளும்
                        பொருளை வாஞ்சியேன்;
            கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
                        மெய்ப் பொருள் நாடுவேன்;
            என் பொக்கிஷம், என் செல்வம்,
                        என் ஆஸ்த்தி கிறிஸ்துவே;
            என் பாக்கியம், பேரின்பம்,
                        எல்லாம் என் மீட்பரே.

6.         என் இயேசுவை நான் பற்றி
                        தொடர்வேன் ஆவலாய்;
            என் சாபத்தை அகற்றி
                        ரட்சித்தார் நேசமாய்;
            நான் தப்ப எனக்காக
                        தம் ரத்தம் சிந்தினார்;
            எனக்கு ஜீவனாக
                        ஜெயித்தழும்பினார்.

7.         இஸ்தோத்திரம் செலுத்த
                        மிகுந்த நியாயமாம்;
            ஏன், ஜீவனைக் கொடுத்த
                        என் கர்த்தருக்கெல்லாம்
            ஆதீனமாவதாக;
                        அவருக்கென்றைக்கும்
            பணிந்த பக்தியாக
                        நான் கீழ்ப்படியவும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு