கர்த்தாவை நல்ல பக்தியாலே
Wer nur den lieben Gott lasst
walten
Bavarian 172
322 9, 8, 9, 8, 8, 8
1. கர்த்தாவை
நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும்
நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் காப்பற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோர்க்கவர் கன்மலை
.
2. அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்குது
.
3. உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவர்க்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக;
விசாரிப்பார், அமர்ந்திரு,
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்
.
4. சந்தோஷிப்பிக்கிறதான
நாள் எதென்றவர் அறிவார்;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்,
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத்
தரும்.
4. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரிய னென்றும் எண்ணாதே;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது.
5. கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்த்துவார், உயர்த்துவார்,
அடிக்கிறார், அணைக்கிறார்
.
7. மன்றாடி பாடி கிரிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக;
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய்;
நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்
Comments
Post a Comment