பரத்தின் ஜோதியே


Zeuch meinon Geist triff
Darwall's 148

308                             6, 6, 6, 6, 8, 8

1.                     பரத்தின் ஜோதியே,
                        என்மேல் இறங்கிடும்;
                        பிரகாசத்துடனே
                        உள்ளத்தில் விளங்கும்;
            நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
            நற் கதிர் வீசக் கடவீர்.

2.                     நிறைந்த அருளால்
                        லௌகீக ஆசையை
                        அகற்றி, ஆவியால்
                        பேரின்ப வாஞ்சையை
            வளர்த்து நித்தம் பலமாய்
            வேரூன்றச் செய்யும் தயவாய்.

3.                     நீர் என்னை ஆளுகில்,
                        நான் வாழ்ந்து பூரிப்பேன்;
                        நீர் என்னை மறக்கில்,
                        நான் தாழ்ந்து மாளுவேன்;
            என் ஊக்கம் ஜீவனும் நீரே,
            கடாட்சம் செய்யும், கர்த்தரே.

4.                     தெய்வன்பும் தயவும்
                        உம்மாலேயே உண்டாம்;
                        நற்குணம் யாவுக்கும்
                        நீர் ஜீவ ஊற்றேயாம்
            நான் வாழும்படி என்றைக்கும்
            என்னை நிரப்பியருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு