மகிழ்ச்சி ஓய்வுநாளே


O Day of rest and gladness

Day of Rest.  Meirionydd

45                                                                            7, 6, 7, 6, D

1.          மகிழ்ச்சி ஓய்வுநாளே!
                        பூரிப்பு ஜோதியாம்;
            கவலை துக்கம் போக்கும்
                        மா பாக்கிய நல்நாளாம்;
            மாந்தர் குழாம் இந்நாளில்
                        சேர்ந்தே ஆராதிப்பார்!
            மா தூயர் தூயர் தூயர்
                        திரியேகர் பணிவார்.

2.         முதலாம் சிஷ்டி ஜோதி
                        இந்நாளில் தோன்றிற்றே;
            தம், சாவை வென்று மீட்பர்
                        இந்நாள் எழுந்தாரே;
            தம் ஆவி வெற்றி வேந்தர்
                        இந்நாளில் ஈந்தாரே;
            ஆ! மாட்சியாம் இந்நாளில்
                        மூவொளி வந்ததே.

3.         இப்பாழ் வனாந்தரத்தில்
                        நீ திவ்விய ஊற்றேயாம்
            உன்னின்று மோட்சம் நோக்கும்
                        பிஸ்கா சிகரமாம்;
            ஆ! எம்மை முசிப்பாற்றும்
                        நல் அன்பாம் நாள் இது;
            மண்ணின்று விண்ணில் ஏற்றும்
                        புத்துயிர் நாள் இது.

4.         செல்வோம் புத்தருள் பெற்று
                        இவ்வோய்வு நாளிலே
            மெய்பக்தர் மோட்ச லோக
                        மா பாக்கிய ஓய்வுக்கே
            பிதா சுதன் சுத்தாவி
                        எம் ஸ்தோத்ரம் பெறுவீர்;
            சபையின் நாவால் கீதம்
                        திரியேகரே ஏற்பீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு