மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்


The happy Christmas comes once more

American Lutheran Hymnal 358

69                                                                                     L.M.

1.          மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்.
            அகத்தில் பாலனைப் பெற்றோம்;
            விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்
            விண் எட்டும் மகிழ் பெற்றனர்.

2.                     மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்;
                        ஆ! வான மாட்சி துறந்தார்;
                        சிரசில் கிரீடம் காணோமே
                        அரசின் செல்வம் யாதுமே.

3.         பார் மாந்தர் தங்கம் மாட்சியும்
            ஆ! மைந்தா இல்லை உம்மிலும்
            விண்ணோரின் வாழ்த்துப் பெற்ற நீர்
            புல்லணைக் கந்தை போர்த்தினீர்.

4.                     ஆ! இயேசு பாலன் கொட்டிலின்
                        மா தேசு விண் மண் தேக்கவே,
                        நள்ளிருள் நடுப் பகலாம்
                        வள்ளல் முன் சூரியன் தோற்குமாம்.

5.         ஆ! ஆதி பக்தர் தேட்டமே!
            ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!
            ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!
            தாவீதின் மைந்தன் கர்த்தன்நீர்

6.                     பண்டிகை இன்றே வருவீர்,
                        திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;
                        ஓய்ந்த எம் கானம் மீண்டிடும்
                        ஓய்வின்றிப் பூரித்தார்த்திடும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே