நான் உம்மை முழுமனதால்
Thee will I love, my Strength
Stella
363 8, 8,
8, 8, 8, 8
1. நான் உம்மை
முழுமனதால்
சிநேகிப்பேன், என் இயேசுவே;
நான் உம்மை நித்தம் வாஞ்சையால்
பின்பற்றுவேன், என் ஜீவனே;
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
2. நான் உம்மை நேசிப்பேன், நீர் தாம்
என் உத்தம சிநேகிதர்;
நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்;
நீரே என் மீட்பரானவர்;
நான் உம்மை முன் சேராததே
நிர்ப்பந்தம்; வெட்கம்; நஷ்டமே.
3. உம்மைப் பற்றாமல் வீணணாய்
பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்;
பரத்தை விட்டுத் தூரமாய்,
இகத்தை அன்பாய்ப் பற்றினேன்;
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.
4. நான் உம்மைச் சுக வாழ்விலும்
சிநேகிப்பேன் என் கர்த்தரே;
நான் உம்மைத் துன்ப நாளிலும்
நேசிப்பேன் என்தன் இயேசுவே;
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில் தானே தங்குவீர்.
Comments
Post a Comment