நாற்பது நாள் ராப் பகல்


Forty days and forty nights
Heinlein

90                                                                    7, 7, 7, 7, 7, 7

1.         நாற்பது நாள் ராப் பகல்
            வனவாசம் பண்ணினீர்;
            நாற்பது நாள் ராப்பகல்
            சோதிக்கப்பட்டும் வென்றீர்.

2.         ஏற்றீர் வெயில் குளிரை
            காட்டு மிருகத் துணை;
            மஞ்சம் உமக்குத் தரை,
            கல் உமக்குப் பஞ்சணை.

3.         உம்மைப்போல நாங்களும்
            லோகத்தை வெறுக்கவும்,
            உபவாசம் பண்ணவும்
            ஜெபிக்கவும் கற்பியும்.

4.         சாத்தான் சீறி எதிர்க்கும்
            போதெம் தேகம் ஆவியை
            சோர்ந்திடாமல் காத்திடும்
            வென்றீரே நீர் அவனை.

5.         அப்போதெங்கள் ஆவிக்கும்
            மா சமாதானம் உண்டாம்;
            தூதர் கூட்டம் சேவிக்கும்
            பாக்கியவான்கள் ஆகுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு