இரத்தம் காயம் குத்தும்
68. Passion chorale, 2 7s,
6s, 8l.
"O
sacred Head now wounded"
1. இரத்தம் காயம்
குத்தும்
நிறைந்து, நிந்தைக்கே
முட்கிரீடத்தாலே சுற்றும்
குத்துண்ட சிரசே,
முன் திவ்ய மேன்மை கொண்ட
நீர் லச்சை காண்பதேன்?
ஐயோ வதைந்து நொந்த
உம்முன் பணிகிறேன்.
2. நீர் பட்ட வாதை யாவும்
என் பாவப் பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும்
என் குற்றம், கர்த்தரே,
இதோ! என்றைக்கும் சாக
நான் பாத்திரன் ஆனேன்
ஆனாலும் நீர் அன்பாக
என்னைக் கண்ணோக்குமேன்.
3. நான் உம்மைத் தாழ்மையாக
வணங்கி, நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக
துதிப்பேன், யேசுவே,
நான் உம்மில் ஊன்றி நிற்க
சகாயராய் இரும்;
உம்மோடு நான் மரிக்க
கடாட்சித்தருளும்.
4. என் மூச்சொடுங்கும் அந்த
கடை இக்கட்டிலும்
இப்பாவிக்காய் இறந்த
உம்மையே காண்பியும்;
அப்போது என்னைச் சேர்த்து
உம் திவ்ய மார்பிலே
அணைத்துக் கொண்டு காத்து
ஈடேற்றும் யேசுவே.
Comments
Post a Comment