பாவ நாசர் பட்ட காயம்


69. Love Divine:        Batty, Dorrnance                               8s, 7s.

"Sweet the moments rich in....."

1.          பாவ நாசர் பட்ட காயம்
                        பார்த்துணர்ந்து கொள்வது
            சுத்தம், செல்வம், நற்சகாயம்
                        சமாதானம் உள்ளது.

2.         ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
                        அன்பின் வெள்ளம் ஆயிற்று;
            தேவ நேசம் அதினாலே
                        மானிடர்க்குத் தோன்றிற்று.

3.         ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
                        தஞ்சம் என்று பற்றினேன்;
            அவர் திவ்ய நேசமுகம்
                        அருள் வீசக் காண்கிறேன்.

4.         பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
                        துக்கத்தால் கலங்குவேன்;
            அவர் சாவால் துக்கம் மாறி
                        சாகா ஜீவன் அடைவேன்.

5.         நாதா நானும் மோட்சம் சென்று
                        உம்மைக் காணுமளவும்
            நன்றியுள்ள நெஞ்சத்தோடு
                        உம்மைப் பற்ற அருளும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே