15 October 2018

தேவ ஆட்டுக்குட்டியே


120. Dix                                                                             7s, 6l

"Liebster Jesu, liebstes Leben"

1.         தேவ ஆட்டுக்குட்டியே,
            லோகத்தாரின் மீட்பரே,
            உம்மால் மீட்கப்பட்ட நான்
            தேவரீர்க்கு அடியான்;
            நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
            ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2.         தேவரீரின் ரட்சிப்பை
            சாரும் விசுவாசியை
            லோகம் மாம்சம் பாவமும்
            மூர்க்கமாய் விரோதிக்கும்
            சாத்தான் நித்தம் எதிர்ப்பான்
            கண்ணி வைத்துச் சோதிப்பான்.

3.         கர்த்தரே, என் உள்ளத்தில்
            அருள் தந்தென் மனதில்
            அந்தகாரம் நீங்கிட,
            அன்பின் தீபம் ஸ்வாலிக்க
            ஆவியின் நல் ஈவையும்
            பூர்த்தியாக அளியும்.

4.         எந்த நாழிகையிலே
            நீர் வந்தாலும், யேசுவே
            உம்மையே நான் சந்திக்க
            கண்ணால் கண்டு களிக்க
            நான் விழித்திருக்கவே
            நித்தம் ஏவி வாருமே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...