25 October 2018

ஆராய்ந்து பாரும் கர்த்தரே

ஞாபா:198

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

198. St. Flavian, France                                                                   C.M.

 

"Search me, O God, my action try"

 

1.       ஆராய்ந்து பாரும், கர்த்தரே,

                        என் க்ரியை யாவையும்

            நீர் காணுமாறு காணவே

                        என்னில் ப்ரகாசியும்.

 

2.         ஆராயும் என்தன் உள்ளத்தை,

                        நீர் சோதித்தறிவீர்;

            என் அந்தரங்க பாவத்தை

                        மா தெளிவாக்குவீர்

 

3.         ஆராயும் சுடரொளியால்

                        துராசை தோன்றவும்;

            மெய் மனஸ்தாபம் அதனால்

                        உண்டாக்கியருளும்.

 

4.         ஆராயும் சிந்தை, யோசனை,

                        எவ்வகை நோக்கமும்,

            அசுத்த மனோபாவனை

                        உள்ளிந்திரியங்களும்.

 

5.         ஆராயும் மறைவிடத்தை

                        உம் தூய கண்ணினால்;

            அரோசிப்பேன் என் பாவத்தை

                        தேவானுக்ரகத்தால்.

 

6.         இவ்வாறு நீர் ஆராய்கையில்,

                        சாஷ்டாங்கம் பண்ணுவேன்,

            உம் சரணார விந்தத்தில்

                        சுத்தாங்கம் தேடுவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...