மயங்கும் தாசனை
Thy wa not mine O Lord
Delomite Chant, Ibsteme
325 6, 6, 6, 6
1. மயங்கும்
தாசனை
நாதா, நீர் நடத்தும்;
என் பாதை காட்டியாய்
சகாயம் புரியும்.
2. நீர் காட்டும் பாதைதான்
எப்போதும் நல்லதே;
கற்று, நேர் ஆயினும்
விண் வீடு சேர்க்குமே.
3. என் சித்தம் ஆபத்தாம்,
உம் சித்தம் நாடுவேன்;
நான் செல்லும் பாதையை
நீர் காட்டக் கெஞ்சுவேன்.
4. நான் தேடும் ராஜியம்
உம் சொந்தமானதே;
அங்கென்னைச் சேர்த்திடும்
பாதையும் உம்மதே.
5. உம் சித்தம்போல நீர்
என் பாத்திரம் எடுத்தும்
சந்தோஷம், சஞ்சலம்,
ஏதாலும் நிரப்பும்.
6. வியாதி, சுகமோ,
இஷ்டர், பகைஞரோ,
வறுமை, செல்வமோ,
சிறிதோ, பெரிதோ.
7. என் இஷ்டம் எதிலும்
வேண்டாம்; என் நாதரே,
என் வழி காட்டியாம்
நீர் சர்வ ஞானரே.
Comments
Post a Comment