கர்த்தாவின் சுத்த ஆவியே


130. Frankfort.                                                          8, 8, 7, 8, 8, 7, 4, 12, 8.

"O heil ger Geist kchr bei uns ein"

1.         கர்த்தாவின் சுத்த ஆவியே,
            நீர் எங்கள் ஆத்துமாவிலே
                        இறங்கி வாசம் பண்ணும்;
            பரம ஜோதியாகிய
            உம்மாலே நாங்கள் சீர்ப்பட
                        தெளிந்த நெஞ்சும் கண்ணும்
                                    தந்து, வந்து
                        மெய் ஜெபத்தை, நற்குணத்தை
                        போதித்தீயும்;
            மெய்ச் சந்தோஷத்தை அளியும்.

2.         நீர் போதிக்கும் நல்வார்த்தையே
            எப்போதும் எங்கள் நெஞ்சிலே
                        மெய்த் தீபமாவதாக,
            பிதா, சுதன் இருவரால்
            இறங்கும் உம்மையும் அதால்
                        த்ரியேக தெய்வமாக
                        நல்ல, வல்ல
            கனிவோடும் பணிவோடும்
                        போற்றிப் பாடும்
            வாக்கை எங்களுக்குத் தாரும்.

3.         கற்போடு எங்கள் நாட்களை
            கழிக்க எங்கள் ஆவியை
                        பலப்படுத்த வாரும்;
            பொல்லாத ஆசை இச்சையை
            விலக்கி, அது எங்களை
                        தீண்டாதபடி காரும்;
                                    வான, ஞான
            வாழ்வை நாடும் சீரைத்தாரும்,
                        மோட்சம் காட்டும்;
            அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு