கர்த்தா உம் மாட்சி கரத்தால்
Thine Arm O Lord in days of old
St. Matthew
223 D.C.M.
1. கர்த்தா உம்
மாட்சி கரத்தால்
நோய் சாவும் நீங்கிற்றே;
சுத்தாங்க சுகம் ஜீவனும்
உம் வார்த்தை நல்கிற்றே;
அந்தகர் ஊமை செவிடர்,
நிர்ப்பந்தராம் குஷ்டர்,
சொந்த பல்வேறு ரோகஸ்தர்,
நாடோறும் வந்தனர்.
2. மா வல்ல கரம் தொடவே,
ஆரோக்கியம்
பெற்றனர்;
பார்வை நற்செவி பேச்சுமே
பெற்றே
திரும்பினர்;
மா வல்ல நாதா, இன்றுமே
மறுகும்
ரோகியும்
சாவோரும் தங்கும் சாலையில்
ஆரோக்கியம்
அளியும்.
3. ஆரோக்கிய ஜீவ நாதரே,
நீரே
எம் மீட்பராய்,
ஆரோக்கியம் ஜீவன் சீருமே
அருளும்
தயவாய்;
சரீரம் நற்சீர் நிறைந்து
உம்
மக்கள் யாவரும்
சன்மார்க்க ஞானம் உள்ளோராய்
உம்மைத்
துதிக்கவும்.
Comments
Post a Comment