கர்த்தரை என்றுமே


He who would valiant be
Monks Gate

380                                   6, 5, 6, 5, 6, 6, 6, 5.

1.         கர்த்தரை என்றுமே
                        பின் செல்லும் சீஷன்,
            எத்தோல்வி தீங்குமே
                        மேற்கொள்ளும் வீரன்,
            எப்பயமின்றியே
            தான் கொண்ட எண்ணமே
            விடானே என்றுமே,
                        மோட்சம் செல்லுவோன்.

2.         திகில் உண்டாக்குவார்
                        கோரக் கதையால்,
            தாமே தத்தளிப்பார்
                        வீரன் ஊற்றத்தால்;
            மாற்றாரை மடக்கி
            ராட்சதர் அடக்கி
            காட்டிடுவான் சக்தி
                        மோட்சம் செல்லுவோன்.

3.         கர்த்தா, நீர் காத்திட
                        தூய ஆவியால்,
            பெறுவேன் நித்திய
                        ஜீவன் முடிவில்;
            வீண் எண்ணம் ஓடிடும்,
            வீண் பயம் நீங்கிடும்,
            முயற்சிப்பேன் என்றும்
                        மோட்சம் செல்லுவேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே