18 October 2018

வைகறை இருக்கையில்


St. George (Elvey)

132                                   7, 7, 7, 7 D

1.         வைகறை இருக்கையில்
            ஓடி வந்த மரியாள்
            கல்லறையின் அருகில்
            கண்ணீர் விட்டு அழுதாள்
            'என்தன் நாதர் எங்கேயோ?
            அவர் தேகம் இல்லையே!
            கொண்டு போனவர் யாரோ?'
            என்று ஏங்கி நின்றாளே.

2.         இவ்வாறேங்கி நிற்கையில்
            இயேசு, 'மரியாள்' என்றார்
            துக்கம் கொண்ட நெஞ்சத்தில்
            பூரிப்பை உண்டாக்கினார்
            தெய்வ வாக்கு ஜீவனாம்
            தெய்வ நேசம் மோட்சமே;
            தூய சிந்தையோர் எல்லாம்
            காட்சி பெற்று வாழ்வாரே

(396 பாவும் பொருத்தமானது)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...