ஜீவாதிபதி ஜோதியே


Jesu Thou Joy of loving hearts

Ealing

263                                       L.M.

1.         ஜீவாதிபதி, ஜோதியே,
            பக்தரின் இன்ப இயேசுவே,
            லோகின் மா இன்பம் ருசித்தும்
            சேர்ந்தோம் உம்பாதமே மீண்டும்.

2.         பாதம் சேர்ந்தோரை மீட்பீரே
            இவ்வுண்மை என்றும் மாறாதே;
            தேடுவோர்க்கு நீர் நல்லவர்;
            பற்றுவோர்க்குச் சம்பூரணர்.

3.         விண் அப்பம் உம்மில் ருசிப்போம்,
            முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்;
            நீர் ஜீவ ஊற்று உம்மிலே
            உள்ளத்தின் தாகம் தீருமே.

4.         மாறிடும் வாழ்க்கை யாவிலும்
            எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்;
            உம் அருட் பார்வை இன்பமே,
            விஸ்வாசிப்போர்க்குப் பாக்கியமே.

5.         தங்கும் எம்மோடு, இயேசுவே,
            எக்காலும் ஆற்றித் தேற்றுமே;
            காரிருள் பாவம் ஓட்டுமே,
            உம் தூய ஜோதி வீசுமே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே