16 October 2018

என் பாவத்தின் நிவர்த்தியை


125. Rockingham, Williams                                     (392)   L.M.

"O Jesu, du mein Brautigam"

1.         என் பாவத்தின் நிவர்த்தியை
            உண்டாக்க, அன்பாய் ஜீவனை
            கொடுத்து, சிலுவையிலே
            மரித்த தெய்வ மைந்தனே.

2.         எல்லாருக்கும் நீர் ரட்சகர்,
            தவிப்புள்ளோர்க்கு தாரகர்;
            மருந்து நீர், ஆ! என்னையும்
            குணப்படுத்தி ரட்சியும்.

3.         எனது தஞ்சம் ஆனீரே;
            குணம் அளியும், யேசுவே;
            அசுத்தமான யாவையும்
            நிவிர்த்தியாக்கி அருளும்.

4.         இருண்ட நெஞ்சில் ஒளியும்
            மெஞ்ஞானம் விசுவாசமும்
            கொடுத்தென் பாதை காட்டவே,
            ப்ரகாசியும், விண் ஜோதியே!

5.         நான் சாகும்போதென் ஆவியை
            உம்மண்டை சேர்த்து மோட்சத்தை
            அடையச் செய்யும், கர்த்தரே;
            புகழ் உமக்குண்டாகவே!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...