25 October 2018

லௌகீக இன்பம் வேடிக்கை


191. Lusatie St. Mathias                        8s, 6l.

"Ach sagt mir nichts von gold..."

1.          லௌகீக இன்பம், வேடிக்கை
                        செல்வமும் எனக்கு வேண்டாம்;
            பரம நன்மை ஒன்றுமே
                        இங்கில்லை, யாவும் மாயையாம்;
            பொருளல்லாததை நாடேன்,
            நான் யேசுவைச் சிநேகிப்பேன்.

2.         லௌகீக வாழ்வு ஒழியும்;
                        சரீர அழகற்றுப்போம்,
            நரரின் வேலை அழியும்,
                        இவ்வுலகமும் வெந்துபோம்;
            பொருளல்லாததை நாடேன்,
            நான் யேசுவைச் சிநேகிப்பேன்.

3.         இயேசுவின் இராஜ்ஜியம்
                        அழிந்துபோக மாட்டாதே,
            அவரது சிம்மாசனம்
                        விழாமல் என்றும் நிற்குமே;
            பொருளல்லாததை நாடேன்,
            நான் யேசுவைச் சிநேகிப்பேன்.

4.         நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
                        துயரம் நீங்க மாட்டாதே,
            பரத்தில் போன பின் உண்டாம்
                        மகிமை செல்வம்; பூரிப்பே;
            பொருளல்லாததை நாடேன்,
            நான் யேசுவைச் சிநேகிப்பேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...