18 October 2018

தேவாவியால் இரக்கமாய்


142. London New, Evan                  (397)   C.M.

"How precious is the Book divine"

1.         தேவாவியால் இரக்கமாய்
                        உண்டான வேதமே
            உயர்ந்த ஞானமுள்ளதாய்
                        அருளப்பட்டதே.

2.         அதில் பிறந்த போதனை
                        விளக்கைப் போலவே
            கதிக்குப் போகும் மார்க்கத்தை
                        விளக்கிக் காட்டுமே.

3.         இருள் நிறைந்த பூமியில்
                        அதே நடத்துமே;
            பரத்தை நோக்கிப் போகையில்
                        நட்சத்திரம்போல் ஆமே.

4.         இவ்வருள் வேதம் தந்ததால்
                        கர்த்தாவே, உமக்கே
            எந்நாளும் சர்வ சபையால்
                        புகழ் உண்டாகுமே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...