தேவாவியே என் நெஞ்சை நீர்


141. Canonbury, Dwight.                                                      L.M.

"Komm, Gott schopfer, heiliger..."

1.         தேவாவியே, என் நெஞ்சை நீர்
            திருப்பிப் புதிதாக்குவீர்;
            உம்மாலேயன்றி என்னிலே
            ஓர் நன்மைதானும் இல்லையே.

2.         உம்மால் கர்த்தாவை அறிவேன்
            உம்மால் “பிதாவே” என்கிறேன்;
            நீர் என்னைச் சத்தியத்திலே
            முடியவும் தற்காப்பீரே.

3.         என் பாதங்கள் யாவையும்
            நீக்கி என் நெஞ்சைக் கழுவும்;
            என் விசுவாசம் நேசமும்
            மென்மேலும் வளரச் செய்யும்.

4.         இவ்வருள் செய்யும் உமது
            அளவிறந்த அன்புக்கு
            இப்போதெப்போதும் உமக்கே
            மா ஸ்தோத்திரம் உண்டாகவே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு