நான் பலவீன தோஷியாம்
So seak am I O gracious Lord
St. Peter
348 C.M.
1. நான் பலவீன
தோஷியாம்,
நீர் தயா மூர்த்தியே;
நின்பாதத் தூளும் மேலிடும்
நீர்பந்த நீசனே.
2. எப்பாவம் வெட்கம் எட்டிடா,
ஏகாந்த ஜோதியே,
என் பாவம் நிந்தை தாங்கினீர்;
என் சொல்வேன் அன்பையே.
3. பிதாவின் மாட்சி ஆசனம்
ஆபாத்திர பாவிக்காய்
சுதா, நீர் நீத்து மாந்தர் தம்
சரீரம் எடுத்தீர்.
4. கை காலில் ஆணி பாய்ச்சுங்கால்
சகித்தீர் சாந்தமாய்;
ஐயா, எந்நாமம் சாற்ற உம்
பொறுமை தூய்மைக்கே!
5. அன்பே, நீர் மாந்தன் ஆகினீர்
என் அன்பைப் பெற்றிட;
நான் பாவி, தோஷி, வெட்கத்தால்
முன்னிற்கத் துணியேன்.
6. உம் தயை அன்பால் மட்டுமே
நான் பாத்திரன் ஆயினேன்;
உம் தாசர் காக்கும் வண்ணமே
காப்பீர் நீர் என்னையும்.
Comments
Post a Comment