சிலுவை தாங்கு மீட்பர் பின்


Take up thy cross the Saviour said
Breslau

312                                                 L.M.

1.         சிலுவை தாங்கு மீட்பர் பின்
            அவரின் சீஷனாகவே;
            வெறுப்பாய் உன்னை லோகத்தைப்
            பின் செல்வாய் தாழ்மையாகவே.

2.         சிலுவை தாங்கு, பாரத்தால்
            கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்;
            விண் பலம் உன்னைத் தாங்கிடும்,
            வல்லமை வீரம் பெறுவாய்.

3.         சிலுவை தாங்கு, மேட்டிமை
            கொள்ளாய், எந்நிந்தை எண்ணிடாய்;
            நீ பாவம் சாவை மேற்கொள்ள
            உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்.

4.         சிலுவை தாங்கி நின்றிடு,
            தீரமாய் மோசம் யாவிலும்;
            சிலுவை சேர்க்கும் மோட்சத்தில்
            சாவின் மேல் வெற்றி ஈந்திடும்.

5.         சிலுவை தாங்கிக் கிறிஸ்துவை
            பின் செல்வாய் ஆயுள் முற்றுமே;
            மகிமை கிரீடம் சூடுவாய்
            சிலுவை தாங்கின் மட்டுமே.

6.         திரியேகரான மா கர்த்தா,
            என்றென்றும் போற்றப்படுவீர்;
            மேலோக நித்திய வாழ்வுக்கே
            அடியாரை நடத்துவீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு