துக்கங் கொண்டாட வாராயோ
74. St. Mary C.M.
"Oh
come and mourn with..."
1. துக்கங் கொண்டாட வாராயோ?
ஆ,
யேசு ஜீவனை விட்டார்!
திகில்
கலக்கங் கொள்ளாயோ?
மீட்பர்
சிலுவையில் மாண்டார்.
2. போர்வீரர்,
யூதர் நிந்தித்தும்
மா
சாந்தமாகச் சகித்தார்,
நாமோ
புலம்பி அழுவோம்;
யேசு
சிலுவையில் மாண்டார்.
3. கை
காலை ஆணி பாய்ந்ததே;
கொடூர
தாகம் அடைந்தார்;
மெய்தொய்ந்ததால்
கண் இருண்டே
யேசு
சிலுவையில் மாண்டார்.
4. மும்மணிநேரம்
மாந்தர்க்காய்
தம்
மெளனத்தாலே கெஞ்சினார்;
நல்வாக்யம்
ஏழும் மொழிந்தே
யேசு
சிலுவையில் மாண்டார்.
5. சிலுவையண்டை
வந்து சேர்,
நேசர்
ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற
அன்பைச் சிந்தியேன்;
யேசு
சிலுவையில் மாண்டார்.
6. உருகும்
நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும்
தாரும், யேசுவே;
மாந்தர்மீதன்பு
கூர்ந்ததால்
நீர்
சிலுவையில் மாண்டீரே!
Comments
Post a Comment