ஆயுததாரி நான் அபாத்திரனே
4. 'Only an armour-bearer' (696)
1. ஆயுததாரி
நான், அபாத்திரனே,
சேனாபதிக்கோ பின் செல்வேனே.
நில், செல் என்றவர் சொல்லக் கேட்கவும்,
யேசுவின் நல்வாக்கை நம்பி வெல்லவும்.
பல்லவி
பேரொலி கேட்குதே! ஜெயமுண்டாம்!
போராடுவோம் முனைமுகமெல்லாம்.
சேனாதிபதி என்னை நோக்குவார்;
ஆயுததாரியையும் நம்புவார்.
2. ஆயுததாரி நான் இந்நேரத்தினில்
சன்னத்தனாகப் படை முகத்தில்,
போர்க்களத்தில் தாரவாரங் கேட்கவே
பயமில்லாமல் யுத்தஞ்செய்வேனே.
பேரொலி கேட்குதே! மி.
3. ஆயுததாரி நான், அசக்தனுமாய்க்
காணப்பட்டாலும், வெற்றிவேந்தனாய்
நித்திய காலம் மிக வாழுவேன்,
மோட்ச வீட்டில் என்றும் நிலைத்திருப்பேன்.
பேரொலி கேட்குதே! மி.
Comments
Post a Comment